பிசிசிஐயின் மேல்முறையீடு மனு வழக்கில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீPசாந்தின் ஆயுட்கால தடை நீக்கத்தை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு ஸ்ரீசாந்த் ஐ.பி.எல். போட்டியின்போது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டமையினால் பி.சி.சி.ஐ. ஒழுங்கு நடவடிக்கைக்குழு அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது.
எனினும் பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில் ஸ்ரீPசாந்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என அவரை நீதிமன்றம் அவரை விடுதலை செய்த போதும் பிசிசிஐ அவர்; மீதான வாழ்நாள் தடையை நீக்கவில்லை.
இந்தநிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்த நிலையில் உயர்நீதிமன்றம் வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டது.
இந்தநிலையில் நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ள நிலையில் பிசிசிஐ-யால் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையில் உயர்நீதிமன்றத்தால் குறுக்கிட இயலாது எனத் தெரிவித்து ஸ்ரீசாந்த் ஆயுட்கால தடையை நீக்கிய உத்தரவை திரும்ப பெற்றது. இதனால் ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீடிக்கிறது.