குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக்கிய அரச படையினர் முக்கிய எரிபொருள் மையமொன்றை கைப்பற்றியுள்ளனர். குர்திஸ்தான் படையினர் வசம் நீண்ட காலமாக காணப்பட்ட எரிபொருள் மையமொன்றே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை முதல் ஈராக்கிய படையினர், குர்திஸ்தான் பிராந்தியத்தினை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
குர்திஸ்தான் பிராந்தியத்தில் இது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்பட்டிருந்ததுடன் சுதந்திரப் பிரகடனம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குர்திஸ்தான் பிராந்தியத்தில் காணப்பட்ட மிகவும் முக்கியமான ஒர் எரிபொருள் மையத்தை ஈராக்கிய படையினர் முற்று முழுதாக கைப்பற்றி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.