குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடடலோனிய சுதந்திரப் போராட்டச் செயற்பாட்டாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்னளர். ஸ்பெய்ன் நீதிமன்றம் கைது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளது. ஜோர்டி சான்செஸ் ( Jordi Sánchez ) மற்றும் ஜோர்டி க்யூயார்ட் ( Jordi Cuixart ) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிவினைவாதத்தை தூண்டியதாக இருவரின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மாதம் 1ம் திகதி நடைபெற்ற சுதந்திரப் பிரகடன வாக்கெடுப்பினை வழிநடத்துவதிலும் இந்த இருவரும் முக்கிய பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரும் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக பார்சிலோனாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கட்டலோனியாவில் கைதிற்கு எதிராக பாரியளவில் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.