நியூசீலாந்தில் வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி பொய் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வருவதை குறிப்பிட்ட தொழிற்சாலை நிறுவனம் மறுத்துள்ளது. Rotational Plastics என்ற நிறுவனத்தில் பணியாற்றுபவராகத் தம்மை அறிமுகப்படுத்தும் தமிழர் ஒருவர் பல தொகைப்பணத்தைக் கட்டி வருவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்கிறார்.
தங்குமிட வசதிகளும் வேறு கொடுப்பனவுகளை பற்றி அதில் விண்ணப்பம் அறிக்கைவடிவில் அவர் அனுப்புகிறார். இதுப்பற்றி நியூசீலாந்தில் வாழும் இலங்கையர் ஒருவர் நேரடியாக இந்த நிறுவனத்தை விசாரித்தபொழுது இதற்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனது தெரிவித்துள்ளனர்.
நிறுவனம் உடனடியாக தகவல் தொழிநுட்ப புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனது தெரிவிக்கப்பட்டது. நியூசீலாந்து மட்டுமல்ல வேறு நாடுகளிலும் இப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் வகையில் அறிவிக்கப்படும் அறிவித்தல்களை சரியான ஆதாரமின்றி எவ்வித பணக்கொடுக்கலும் செய்ய வேண்டாம் என இலங்கை வாழ் இளையோர் யுவதிகள் கேட்கப்படுகின்றனர் .