குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவுகளை வரையறுத்து சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தலை நடாத்தும் நோக்கில் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வேட்பாளர் ஒருவர் அல்லது கட்சியொன்று மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் அபிலாஸையில் அதிகளவில் செலவிட்டு மக்கள் மீது தாக்கம் செலுத்த முயற்சித்தால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சுயாதீனமான முறையில் தேர்தலை நடத்த இந்த உத்ததேச சட்டம் வழியமைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.