172
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள வீடுகள் அதிர்ந்துள்ள போதும் உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அங்கு கடந்த 2005-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்ட்ட நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love