Home இலங்கை நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன :

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன :

by admin

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கபில வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.  நேற்றையதினம் தலதா மாளிகைக்குச் சென்று   வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டு சட்டங்கள் நடைமுறையில் இருப்பதாக பரவும் செய்தியில் உண்மையில்லை எனத் தெரிவித்த அவர் சிலர்   பரப்பும் கருத்துக்கள்    காரணமாக இதுபோன்ற தவறான கருத்துக்கள் முன்னெடுக்கப்படுவதாக  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நாட்டில் இருப்பது ஒரு சட்டமே என்றும், அது சரியான முறையில்  நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More