170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் ஒன்பது மாதங்களில் செல்பீ காரணமாக 24 பேர் புகையிரதங்களில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் புகையிரத பாதைகளில் செல்பீ எடுத்தபோதே இவ்வாறு குறித்த 24 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆண்டு தோறும் புகையிரத பாதைகளில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 2016ம் ஆண்டில் புகையிரத பாதைகளில் ஏற்பட்ட விபத்துக்களினால் 180 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன் 256 பேர் விபத்துக்களினால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love