இந்தியா பிரதான செய்திகள்

நாகை, பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் பலி:-

தமிழ்நாட்டின் நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விபத்துக்கு உள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழக கட்டிடத்தின் பணிமனையில் ஓய்வறையில் வேலை முடுடிவடைந்து நடத்துநர்கள், ஓட்டுநர்கள் 20 பேர் இந்த ஓய்வறையில் உறங்கிக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை 4 மணியளவில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள சிரலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link