பங்களாதேசுக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களில் 58சத சதவீதத்தினர் குழந்தைகள் என ஐ.நாவின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது, மேலும் அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பலர் தொற்று நோய்களாலும், ஊட்டசத்துக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் நல சர்வதேச அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.
ரோஹிங்கிய குழந்தைகள் ஆபாயகரமான எதிர்காலத்தை எதிர் நோக்கியுள்ளனர் எனவும் அவர்கள் ஏமாற்றம், வலி போன்ற விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
பங்களாதேசில் அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் சுமார் 14,500 குழந்தைகள் தொற்று நோய்களாலும், ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.