ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதி ஒன்றை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில் வடமெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதியை குறி வைத்து இன்று வெள்ளிக்கிழமை தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 30-க்கும் அதிகமானோர் கொல்லட்டுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ள போதும் 10 பேர்தான் உயிரிழந்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.