குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் தலைவர் செப் பிளட்டருக்கு ரஸ்யா விடுத்த அழைப்பினை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எதிர்வரும் 2018ம் ஆண்டு ரஸ்யாவில் உலகக் கிண்ணப் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிiலையில் அவர் இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார்.
செப் பிளட்டர் சுமார் 17 ஆண்டுகளாக சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் தலைவராக கடமையாற்றியுள்ளார். உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் கலந்து கொள்ளுமாறு ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பினை, பிளட்டர் ஏற்றுக்கொண்டுள்ளார். 2015ம் ஆண்டில் பிளட்டர் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து அவருக்கு ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.