147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அனிகா விஜேசூரியவின் குடும்பத்திற்கு விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான விசாரணைகளில் முக்கிய சாட்சிகளில் ஒருவராக அனிகா விஜேசூரிய சாட்சியமளித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான அனிகா விஜேசூரிய சாட்சியமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து அனிகா, வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love