146
தேர்தல் திருத்தச் சட்டத்தில் காணப்படும் பிழைகளை திருத்திக் கொள்வதற்கு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடுத்த வாரம் சந்தித்து தீர்மானம் எடுக்க உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தில் காணப்படும் பிழைகள் திருத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன யோசனை முன்வைத்துள்ளார்.
திருத்தங்களைச் செய்வதனை விடவும் தீர்மானம் ஒன்றின் மூலம் பிழைகளை திருத்திக் கொண்டால் காலத்தை சேமிக்க முடியும் எனவும், அமைச்சர் பைசர் முஸ்தபா, தேர்தலை ஒத்தி வைக்க முயற்சித்து வருவதாகவும் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love