குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய வம்சாவளி மக்களுக்காக எங்களுடை கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என யாழ் இந்திய துணை தூதுவா் ஆர். நடராஜன் தெரிவித்துள்ளார். இன்று (21) கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில் இடம்பெற்ற வயலும் வாழ்வு மக்கள் கலந்துரையாடல் நிகழ்வில் இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவா் இவ்வாறு தெரிவித்தாh். அவா் மேலும் தெரிவிக்கையில்
கடந்த இரண்டரை வருடங்களாக யாழ் இந்திய துணைதூதுவராக இருக்கும் தான் இதுவரை இங்கு வந்து உங்களை சந்திக்காமை கவலையளிக்கிறது என தெரிவித்துள்ளார். இருந்தும் இன்று சந்தித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் உங்களுடை எந்தப்பிரச்சினைகள் என்றாலும் தங்களிடம் கூறுங்கள் எனவும் தங்களால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருக்கின்றோம். எனவும் தெரிவித்தார்.
மேலும் இங்குள்ள பிள்ளைகளின் கல்விக்கு தாங்கள் உதவத் தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பாக உயர்தரம், பல்கலைகழகம் கல்வியை வறுமை காரணமாக தொடர முடியாதிருந்தால் அவா்கள் தொடர்பில் தங்களுக்கு விபரம் தந்தால் உதவுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இதனைவிட இந்தியாவில் சென்று மேலும் உயர் கல்வியை தொடர வேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் நீங்கள் ஒரு சதம் கூட செலவு செய்யத் தேவையில்லை எனவும் அடிப்படைத் தகுதிகள் இருந்தால் அதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்திய வம்சாவளி மக்கள் இந்தியாவின் வாழ்நாள் விசாவுக்கும் விண்ணப்பிக்க முடியும் எனவும் அந்த வாழ்நாள் விசா இருந்தால் இந்தியாவிலும் வசிக்க முடியும் என்பதுடன் அதற்கு உங்களுடைய உறவு முறை முன்னோh்கள் இ்நதியாவில் இருந்தவா்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம் தேவை எனவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினா் வை தவநாதன், சகாதேவன், குட்டிமாமா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.