குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மனச்சோர்வுடன் காணபடுகின்றார் எனவும் அவரது கண்களிற்கு கீழே நீண்ட கருவளையம் காணப்படுகின்றது எனவும் ஐரோப்பிய ஓன்றியத்தின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஜீன் கிளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமரை கடந்த வாரம் சந்தித்த பின்னர் அவர் இதனை நிருபர் ஓருவரிற்கு தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெரேசா மே பதற்றம்; மனச்சோர்வு நம்பிக்கை இழந்தவராக காணப்பட்டார் என தெரிவித்துள்ள ஜங்கர் அவர் யாரையும் நம்ப தயாரில்லாத பெண்மணி எனவும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தன்னை பதவி கவிழ்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார் எனவும் பேச்சுவார்த்தைகளில் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கான சூழல் தனக்கு இல்லாததால் ஐரோப்பிய ஒன்றியம் அதனை உருவாக்கி தரவேண்டும் என கோரினார் எனவும் ஜங்கர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பிரதமரின் முகமும் தோற்றமும் பல விடயங்களை சொல்கின்றன எனவும் அவரின் முகத்தின் கீழ் நீண் கருவளையங்களை காணமுடிகின்றது அவர் ஓரு நிமிடம் கூட நிம்மதியாக உறங்கமுடியாதவராக காணப்படுகின்றார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் அவர் உற்சாகத்துடன் கைகுலுக்கும் அவர் தற்போது அதனை செயற்கையாக செய்கின்றார் போல் தோன்றுகின்றது என்றும் ஜங்கர் தெரிவித்துள்ளார்.