நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக கந்து வட்டி பிரச்சினை காரணமாக கூலித் தொழிலாளியான இசக்கிமுத்து என்பவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுக்கு தீவைத்ததுடன் தானும் தீமூட்டி தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மனைவி சுப்புலட்சுமியும் இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் காவல்துறையினர் உதவியுடன் மிரட்டல் விடுத்ததாகவும், இதன்காரணமாகவே 4 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
100 சதவிகித காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுப்புலட்சுமி சிகிச்சை பலனின்றி முதலில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் குழந்தைகள் மதி சரண்யா,அட்சயா பரணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிப்பு
Oct 23, 2017 @ 06:43
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தொழிலாளி ஒருவர் தீக்குளித்துள்ளார். நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான 28 வயதான இசக்கிமுத்து என்பவரே இவ்வாறு குடும்பத்துடன் தீக்குளித்துள்ளார்.
இசக்கிமுத்து இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க சென்றுள்ளார்.
அங்கு அதிகமானோர் கூடி நின்றிருந்த வேளை அவர் தான் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் தீபற்ற வைத்துள்ளார். அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் நால்வரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்துவட்டி கொடுமை காரணமாகவே அவர்கள் தீக்குளித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.