குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
மொழி தொடர்பான வகுப்புக்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகேற்பதற்கு நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மொழிகளை கற்றுக் கொடுக்கும் நோக்கில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள போதிலும் இந்த வகுப்புக்களில் அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் வகுப்புக்கள் நடத்தப்பட்டாலும் அதில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, சகோதர மொழியைக் கற்றுக்கொள்ளுமாறு மக்களிடம் சென்று சொல்வதனால் மட்டும் நல்லி;ணக்கம் ஏற்படாது எனவும், அனைவரும் மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டுமெனவும் தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் சகோதர மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.