குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காபன் வெளியீட்டினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காபன் வெளியீடு அதிகரிப்பினால் கடலின் அமிலத்தன்மை அதிகரித்துள்ளதாகவும் இது கடல் வாழ் உயிரினங்களை மோசமாக பாதிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
250 விஞ்ஞானிகளினால் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடல் வாழ் உயிரினங்களின் இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலில் காபன் கழிவு கலக்கப்படுவதனால் இவ்வாறான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.