குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீன வீர வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. சுமார் 10,000 சீன வீர வீராங்கனைகள் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வகைகளை பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலக ஊக்க மருந்து தடைப் பிரிவு இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உள்ளது.
1980 மற்றும் 1990களில் சீன விளையாட்டு வீர வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தினார்கள் என சீன ஒலிம்பிக் அணியின் முன்னாள் மருத்துவர் சூ ஜின்ஸியன் (Xue Yinxian ) தெரிவித்துள்ளார். சீன விளையாட்டுக்களில் திட்டமிட்ட அடிப்படையில் ஊக்க மருந்து பயன்பாடு இடம்பெறுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, 30 ஆண்டுகளுக்கு முன்னர் குற்றம் இடம்பெற்றிருந்தாலும் அதற்கு எதிராக தண்டனை விதிப்பது சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.