குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாக மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஆறு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது. மூன்றாவது தடவையாக ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
விசாரணைகளை பூர்த்தி செய்ய போதியளவு கால அவகாசம் தேவை என ஆணைக்குழு கோரியுள்ள நிலையில் இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதியுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலம் பூர்த்தியடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்ற நீதியரசர்களான ரீ.கித்சிறி, பிரசன்ன சஞ்சீவ ஜயவர்தன மற்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றார்கள்.