குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான விவாகரத்து தொகையாக அதிகளவு நிதியை வழங்குவதற்கு பிரித்தானிய பிரதமர் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர்.
பிரித்தானியா வழங்கவேண்டிய தொகைக்கு அதிகமாக ஒரு சிறிய தொகையை கூட வழங்ககூடாது என அரசாங்கத்தின் பி;ன்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் சிரேஸ்ட பி;ன்வரிசை உறுப்பினரான எட்வேர்ட் லெய் பிரதமர் என்ன உறுதிமொழியை வழங்கியுள்ளார் , அவர்கள் என்ன வேண்டுகோளை முன்வைத்துள்ளனர் என்பது தங்களிற்கு தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கொன்சவேர்ட்டிவ் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த வேண்டுகோள் ஐரோப்பிய ஓன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் பிரதமர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை வெளிப்படுத்தியுள்ளன. பிரித்தானியா செலுத்தவேண்டிய தொகை குறித்த இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளிற்கு செல்ல தயாரில்லை என ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.