173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த அலுவலகத்திற்கான அதிகாரிகளை நியமிப்பதற்காக அரசியல் சாசனப் பேரவை விண்ணப்பங்களை கோரியுள்ளது. உண்மையைக் கண்டறிதல், மனித உரிமை மீறல் விசாரணை, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பில் அனுபவம் உள்ளவர்கள் இந்த நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
நிறுவனத்தில் பதவிகளை வகிப்பதற்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love