குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உகண்டாவின் ஜனாதிபதி யுவேரி முசவெனி ( Yoweri Museveni ) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி தனது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள இவ்வாறு முயற்சிக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உகண்டாவில் ஜனாதிபதியாக பதவி வகிக்கக்கூடிய வயதெல்லையை அதிகரிக்கும் முயற்சியில் 73 வயதான ஜனாதிபதி யுவேரி முசவெனி ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜனாதிபதியின் வயதெல்லை குறித்த திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 8000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருத்தச் சட்டம் தொடர்பில் மக்களுடன் கலந்தாலோசனை செய்யவே இந்தப் பணம் வழங்கப்பட்டது என ஆளும் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பணம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட லஞ்சம் என தெரிவிக்கப்படுகிறது.