குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் திகதிக்கு முன்னதாக நடைபெறும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சித் தலைவர்கள் நடத்திய சந்திப்பின் போது, தேர்தலை துரிதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் நான்கு பிரதேச சபைகளை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் சாதகமான தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றத்திலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் இந்த ஆவணத்தில் அமைச்சர் பைசர் முஸ்தபா விரைவில் கையொப்பமிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.