குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சுக்கள் நிதி ஒதுக்கீடுகளை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுக்காக நிதி அமைச்சினால் அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என அரசாங்க நிதி விவகார செயற்குழுவின் பிரதிநிதி, பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். அநேகமான அமைச்சுக்கள் நிதி ஒதுக்கீட்டை உரிய முறையில் பயன்படுத்தத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் அமைச்சுக்கள் செயற்திறன் இன்றி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதெனவும் மேலும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2018ம் ஆண்டில் அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு தடவையும் ஊடக சந்திப்புக்களை நடத்தி தெளிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.