குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அரசாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்களின் பிரச்சினைகள் அரசியல் சாசனத்தின் ஊடாக தீர்க்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் சாசனத்தின் ஊடாகவே தீர்வு வழங்கப்பட முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கடும்போக்குவாத அடிப்படையில் பிரச்சினைகளை அணுகக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மாறாக நாட்டில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து சில ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்