அமெரிக்காவிற்குள் நுழைய 11 நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை மேலும் நீட்டித்து உத்தவிடப்பட்டுள்ளது. ஏனைய நாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதன் பின்னர் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் 11 நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் அகதிகளுக்கு 90 நாட்கள் தடையும், மக்களுக்கு 120 நாட்களுக்கு தடையும் விதித்து உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் ஏனைய நாட்டு அகதிகள் 90 நாட்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் பாதுகாப்பு கொள்கைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன என்பதை அடுத்த 90 நாட்களில் ஆய்வு நடத்தி அதை உறுதி செய்து கொண்ட பிறகு தடை நீக்கப்படும் என கூறியிருந்தனர்.
இந்தநிலையில் அகதிகள் அமெரிக்கா வருவதற்கான 120 நாட்கள் தடை முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட நாடுகளுக்கான தடையை மேலும் நீட்டித்து டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி எகிப்து, ஈரான், ஈராக், லிபியா, மாலி, வட கொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்கு வருவதற்கு தடை தொடர்கிறது. இந்த 11 நாடுகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை இல்லை.