181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மீள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என கென்ய எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கென்ய எதிர்க்கட்சித் தலைவர் ரெய்லா ஒடிங்கா ( Raila Odinga ) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாளைய தினம் கென்யாவில் மீளவும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் மக்களிடம் கோரியுள்ளார்.
தேர்தல் தினமன்று பாரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் தேர்தலில் வாக்களிப்போரை தெளிவுபடுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
Spread the love