குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் மாவட்ட மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் முஸ்லிம்களுக்கான வீட்டுத்திட்டத்தினை முழுமையாக அமுலாக்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது
யாழ் மாவட்ட முஸ்லிம் சமூகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது
கடந்த 2016ம் ஆண்டு நிதியொதுக்கீட்டின் அடிப்படையில் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுகென மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 200 கல்வீட்டத்திட்டத்தில் இதுவரை 20 பேருக்கு மாத்திரம் வீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மிகுதி மக்களுக்கு இறுக்கமான காரணங்களின் நிமித்தம் அதிகாரிகளினால் வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் தொண்ணூறுகளில் வெளியேற்றப்பட்டு கடுமையான இடப்பெயர்வுகளை சந்தித்து தற்போது சொந்த வாழ்விடம் திரும்பியுள்ள தமக்கு கடும்போக்குடன் செய்றபட்டு வீட்டுத்திட்டங்கள் புறக்கணிப்பது வேதனையளிப்பதாகவும், வீடுவழங்கலில் மென்போக்கினை கடைப்பிடித்து தமக்கான வாழ்விடத்தை அமைக்க சகல தரப்பினரும் உதவ முன்வர வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்வை வீடுத்தனர்.
அத்துடன் வடமாகாண எதிர் கட்சி தலைவர் சின்னத்துரை தவராச மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின்,இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்தது கலந்துரையாடியதுடன் தீர்வை பெற்றுத்தர தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர்
அத்துடன் மத்திய அரசிற்கான தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுகுணவதி தெய்வேந்திரத்திடம் கையளித்தனர்.