குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப் பொருளான ஹெரோயினை வைத்திருந்த இளைஞர்கள் இருவருக்கு இரண்டு மாத சிறைத் தண்டனை வதித்து யாழ்ப்பாண நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார். குற்றவாளிகள் இருவரும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த வேண்டும் எனவும் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை பிரிவினரால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண நகரப் பகுதியிலும் அதனை அண்டிய ஒட்டுமடம் பகுதியிலும் ஹெரோயினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த்து. அவர்கள் இருவரும் தமது குற்றத்தை மன்றில் ஏற்றுக்கொண்டனர். அதனையடுத்து நீதிவான் தண்டணைத் தீர்ப்பை வழங்கினார்.