194
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்படும் தகவல்களுக்கு பிழையான தகவல்களை அதிகாரிகள் தருவதாக வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண திணைக்கள அதிகாரிகள் தமது சொந்த பாவனைக்காக திணைக்கள வாகனங்களை பயன்படுத்துகின்றார்கள். அது தொடர்பான தரவுகள் தகவல்களை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக குறித்த திணைக்களங்களை கேட்ட போது, அவர்கள் தவறான தகவல்களையே தருகின்றார்கள் என தெரிவித்தார்.
Spread the love