குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கடலில் கரைவலை தொழில் செய்வோர் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி தொழில் செய்வதனை கட்டுப்படுத்த வேண்டும் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் எஸ்.சுகிர்தன் என பிரேரரனையை முன் மொழிந்தார்.
வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் சுண்டிக்குளம் முதல் முல்லைத்தீவு வரையிலான கடற்பரப்பில் , கரைவலை தொழில் செய்வோர் உழவு இயந்திரம் பயன்படுத்தி கரை வலை இழுப்பதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படுகின்றது. எனவே உழவு இயந்திரம் பயன்படுத்தி கரை வலை இழுப்பதனை தடைசெய்ய வேண்டும் என பிரேரனையை முன் மொழிந்தார்.