குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கென்யாவில் மீள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மோதல்களில் ஈடுபட்ட பதின்ம வயதுடைய சிறுவன் மீது கென்ய காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் உயிரிழந்துள்ளார். நான்கு பிராந்தியங்களில் அதிகளவான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகளில் தேர்தல் சனிக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்படும் என கென்ய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் கென்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது இதன் போது ஜனாதிபதி உஹுரு கென்யட்டா ( Uhuru Kenyatta ) வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த தேர்தலில் மோசடிகள் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டதனைத் தொடர்ந்து, தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்பட்டு மீளவும் தேர்தல் நடத்தப்பட்டது