குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியல் சாசனம் பற்றி எதுவும் பேசியதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை கூட்டு எதிர்க்கட்சி நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தை திருப்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் புதிய அரசியல் சாசனம் குறித்த உத்தேச வரைவுகளை உருவாக்கியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இந்த புதிய அரசியல் சாசனத்திற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.