குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இறுதித் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் வழங்கப்பட உள்ள தீர்வுத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவே, ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேரம் ஒதுக்கிக் கோரியுள்ளது. ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த தீர்வுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.