குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பும், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் நாளை மறுதினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மைத்திரி தலைமையில் நடைபெறவுள்ள விசேட பேச்சுவார்த்தையில் மஹிந்த தரப்பு இணைந்து கொள்வதா இல்லையா என்பது குறித்து இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட உள்ளது.