177
2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு நீளத் திரைப்படமாக உம்மாண்டி திரைப்படம் வெளிவருகின்றது. நாளை 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்றது.
வாடைக்காற்று, நதிமூலம், உயிர்ப்பு, மண்ணுக்காக, தேசத்தின் புயல்கள், ஈரத்தீ போன்ற தனித்துவமான திரைப்படைப்புக்களை கொண்டது ஈழ சினிமா. அண்மைய காலத்தில் ஈழத்தில் குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழ மண்ணுக்கான திரைப்படங்கள் வெகு குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஈழ மண்ணுக்கான சினிமா முயற்சியில் வெகு சிலரே ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதிசுதா முக்கியமான இயக்குனராக காணப்படுகின்றார். ஈழக் குறும்படங்களின் மூலம் தாக்கம் செலுத்திய இயக்குனர் மதிசுதா உம்மாண்டி என்ற ஈழத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
பாதுகை, துலைக்கே போறியள், தழும்பு, ரொக்கட் ராஜா, மிச்சக்காசு, தொடரி போன்ற தன்னுடைய குறும்படங்களின் மூலம் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியவர் மதிசுதா. ஈழ வாழ்வையும் ஈழத்து திரையின் தனித்துவமான இயல்புகளையும் இவரது குறும்படங்கள் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் வெளிவரவிருக்கும் உம்மாண்டி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போரால் திரைத்துறை நலிவடைந்துள்ள இந்த மண்ணிலிருந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய எளிய முயற்சிகளை ஆதரிப்பதும் இந்த கலைச் செயற்பாட்டை வளர்த்தெடுப்பதும் அவசியமானதொரு கலைச்செயற்பாடு ஆகும்.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love
1 comment
Good attempt. I appreciate the film production unit of Sri lankan northern part folks. lets all support this. Why can’t the guy Lycka mobile over UK fund this of any further effort of those film production in Sri Lanka. In fact they are big financiers in Indian film industry for come up Enthiran 2 and spider.