168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்தவாரம் வெளியிடப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அநேகமாக எதிர்வரும் வாரம் புதன்கிழமையளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது.
Spread the love