குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈராக் படையினருக்கும் குர்திஸ்களுக்கும் இடையிலான யுத்த நிறுத்தம் பற்றிய தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஈராக்கிய அரச படையினருக்கும், குர்திஸ்தான் படையினருக்கும் இடையில் யுத்த நிறுத்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க கூட்டுப் படையினர் அறிவித்திருந்தனர்.
எனினும், இந்த அறிவிப்பு பிழையானது எனவும் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லை வெறும் பேச்சுவார்த்தைகளே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக யுத்த நிறுத்தம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை என கூட்டுப் படையின் பேச்சாளர் கேணல் ரியான் டில்லன் ( Ryan Dillon ) தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.