185
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பதவியை துறந்தேனும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும் என டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமது பதவியை துறந்தேனும் நியாயம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
உமா ஓயா திட்டம் தமது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் சில பொறுப்புக்களை தாம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஹரீன் பெர்னாண்டோ தேவை ஏற்பட்டால் பதவியை துறந்தேனும் மக்களுக்கு சேவையாற்றத் தயார் என குறிப்பிட்டுள்ளார்.
Spread the love