157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடற்படையின்ட புதிய பேச்சாளராக கமாண்டர் தினேஸ் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படை ஊடகப்பிரிவு இந்த நியமனம் குறித்து அறிவித்துள்ளது. கடற்படை பேச்சாளராக கடமையாற்றி வந்த கமாண்டர் லங்கானாத் திசாநாயக்க, பதவி உயர்வு பெற்றுக் கொண்டதன் காரணமாக புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டு மாணவர் படை உத்தியோகத்தராக தினேஸ் பண்டார கடற்படையில் இணைந்து கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனாவில் தினேஸ் பண்டார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love