போராட்டங்களின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காஷ்மமீரில் பொதுச்சொத்து அவசர சட்டம அமுலுக்கு வந்துள்ளது. குறித்த சட்டத்தினை ஆளுனர் என்.என்வோரா நேற்றையதினம் பிறப்பித்துள்ளார்.
காஷ்மீரில் ராணுவத்தினருக்கெதிராக அடிக்கடி போராட்டம், கதவடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகளின் போது கல்வீச்சு உள்ளிட்ட வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதனால் அதிகளவில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்படுகின்றது. இந்தநிலையில் இதனைத் தடுப்பதற்காக மேற்படி சட்டம் அமுலுக்கு கோண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அவசர சட்டத்தின் படி, மேற்படி போராட்டங்களின் போது பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், அந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்களுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் சேதம் ஏற்பட்ட பொருட்களின் பெறுமதிப்புக்கு ஈடான தொகை அபராதமாகவும் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.