206
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் வைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அரசாங்கம் இரண்டு ஆண்டுகளில் எட்டிய இலக்குகள், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிரதமர் தெளிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love