199
கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கிராமத்தின் முதன்மை வீதி, உள்ளக வீதிகளைப் புனரமைத்துத் தருமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எழுநூறிற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற கிராமத்தில் வீதிகள் புனரமைக்கப்படாமல் உள்ளன. ஸ்கந்தபுரம் இல.01, இல.02 பாடசாலைகள், அக்கராயன் மகா வித்தியாலயம் என்பவற்றிற்குச் செல்லும் மாணவர்கள் குன்றுங்குழியுமான வீதி வழியாக பயணிக்க வேண்டி உள்ளதாகவும் மழை காலங்களில் விநாயகர் குடியிருப்பு, மணியங்குளம், இரண்டாம் வாய்க்கால் பகுதி மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாதளவிற்கு வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இல.02 பாடசாலைக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலைமையும் மழை காலங்களில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் முக்கிய வீதிகள் புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும் மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஸ்கந்தபுரம் கிராமத்தில் இருந்து அக்கராயன் மகா வித்தியாலயம் வரையான வீதியினைப் புனரமைத்துத் தருமாறு கடந்த ஏழாண்டுகளாக தொடர்ச்சியாக மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையிலும் குறித்த வீதி புனரமைக்கப்படாமல் இருப்பதாக பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love