இந்தியாவில் 29 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்படுவதில்லை என உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் தட்டம்மை நோயினால் ஆண்டுக்கு சுமார் 90 ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 2000ம் ஆண்டில் இந்நோயினால் 5 லட்சத்து 50 ஆயிரம் உயிரிழந்துள்ளனர். எனினும் ஆண்டு தோறும் சுமார் 2 கோடியே 8 லட்சம் பேர் தட்டம்மை தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை என உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டடோர் நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டம்மை தடுப்பூசி மூலமாக ஆண்டுக்கு சராசரியாக 13 லட்சம் உயிர்கள் காப்பற்றப்படுகின்ற நிலையில் இதை இன்னும் தீவிரப்படுத்தினால் தட்டம்மையை முற்றிலும் ஒழித்து விடுலாம் என தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பு அமைப்பு தலைவர் ரொபேர்ட் லிங்கிஸ் கூறியுள்ளார். இந்தநிலையிலேயே இந்தியாவில் இந்தியாவில் 29 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்படுவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.