Home இலங்கையாழில். மின்கலங்களை திருடிய குற்றத்தில் கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது!

யாழில். மின்கலங்களை திருடிய குற்றத்தில் கடற்படை முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐவர் கைது!

by admin
யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் மின் கலங்களை தொடர்ச்சியாக திருடி வந்த குற்றச்சாட்டில் கடற்படையின் முன்னாள் சிப்பாய் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கைத்தொலைபேசி தொலைத்தொடர்பு வலையமைப்புக்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த மின் கலங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வந்துள்ளன.
இது தொடர்பில், கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குரிய காவல் நிலையங்களில், குறித்த நிறுவனங்கள் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளன
முறைப்பாடுகளின் பிரகாரம் கோப்பாய் காவல்  நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையிலான காவற்துறை குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , மின்கலன்களை களவெடுத்தவர்கள் அம்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விசேட காவற்துறை  குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை அம்பாறையில் இருந்து கோப்பாய் காவல்  நிலையம் கொண்டு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை முன்னாள் சிப்பாய் எனவும் , மற்றுமொருவர் களவாடப்பட்ட மின் கலங்களை கொள்வனவு செய்தவர் எனவும் ஏனைய மூவரும் களவுக்கு உடந்தையாக செயற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 192 மின் கலங்களை  களவாடியுள்ளனர் எனவும், ,மின்கலம் ஒன்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்ச ரூபாய்க்கும் அதிகம் என காவற்துறையினர்  தெரிவித்தனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More