சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதிகள் தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளன.
இங்கு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்ந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் பெரும்பான்மையினர் வேலையில்லாமல் இருப்பதால் வறுமையின் பிடியில் பல குடும்பங்கள் சிக்கியுள்ளன. அப்பகுதிகளில் நிலவும் உணவு பஞ்சத்தினால் குழந்தைகள் பலர் ஊட்டசத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் சிரியா மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை சிரியாவின் கிழக்கு பகுதியில் சுமார் 1500 குழந்தைகள் ஊட்டசத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளின் எடை சராசரி குழந்தையுடன் ஒப்பிடும்போது பாதி எடையில்தான் இருக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.