வடக்கு கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன்:-
சட்டத்திற்கு முற்றிலும் முரனாக பெரும் தொகை நிதியை அனுமதியின்றி அன்பளிப்புச் செய்த கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் மீது நீதியான முறையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை 24.10.201 கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபது ஆயிரத்து 650 ரூபாவை அன்னதானம் மண்டபம் அமைக்க அன்பளிப்பாக வழங்கியது. இது ச்ஙகத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
தாங்கள் நாளாந்தம் பனை தென்னை மரங்களில் ஏறி இறங்கி அ நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் செய்து வருகின்ற போது சஙகம் தங்களது சேம நிதியை இவ்வாறு அன்பளிப்புச் செய்வது கவலையாக உள்ளது எனவும், தங்களின் தொழிலாளா்கள் இன்னமும் பொருளாதார மேம்பாடு அடையாத நிலையில் இருக்கின்ற போதும் பல தொழிலாளர்கள் நிரந்தர வீடுகள் இன்றி காணப்படுகின்ற போதும் சங்கம் பெரும் தொகை நிதியை அன்பளிச் செய்துள்ளது என விசனம் தெரிவித்துள்ளளனர்.
இது தொடர்பாகவே வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரனை தொடர்பு கொண்டு வினவிய போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தாா். அவா் மேலும் தெரிவிக்கையில்
குறித்த விடயம் தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது சங்கத்தின் சட்டத்திற்கு அமைவாக ஜயாயிரம் ரூபா வரை மாத்திரமே அன்பளிப்புச் செய்ய முடியும் அதுவும் உரிய முறைப்படி அனுமதிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் குறித்த சங்கத்தினர் சட்டத்திற்கு முரணாக எவ்வித அனுமதிகளும் இன்றி தங்களின் விருப்படி சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்கின்றனர். எனவே இவா்களின் தொடர்ச்சியான சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் நீதியான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு சங்கத்தை நம்பியுள்ள தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் எனவும் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தாா்
சங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிதி தொடர்பில் கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளல் திருமதி நல்லதம்பி அவா்களை வினவிய போது குறித்த சங்கத்தினர் தங்களிடம் எவ்வித அனுமதிகளும் பெறுவதில்லை என்றும் அவா்கள் தொடர்ச்சியாக கூட்டுறவு சட்டத்திட்டங்களுக்கு புறம்பாக இயங்கி வருகின்றனா் எனவும் இந்த விடயம் தனக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டாா்.