சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நவீன பொருளாதார திட்டத்தை அமுல்படுத்தியுள்ள சவுதி அரேபிய அரசு அதற்கான புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளது. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுவதன் அடிப்படையில் பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கடற்கரை விடுதிகளில் பெண்கள் நீச்சல் உடை அணியவும், வாகனம் ஓட்டவும் சவூதி மன்னர் சல்மான் அனுமதி வழங்கியிருந்தார்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் செல்ல அனுமதிப்பட இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ரியாத், தம்மான், ஜித்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களுக்குள் அடுத்த ஆண்டு முதல் பெண்கள் செல்ல அனுமதிக்கப்பட இருப்பதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.